\
மக்களவைக்கு செல்லும் 76 பெண் எம்.பி.க்கள்..!

மக்களவைக்கு செல்லும் 76 பெண் எம்.பி.க்கள்..!

மக்களவைக்கு செல்லும் 76 பெண் எம்.பி.க்கள்..!
Published on

மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 716 பெண் வேட்பாளர்களில்‌‌ ‌76 ‌பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் 66 பெண்‌ எம்பிக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1‌7-ஆவது மக்களவை தேர்தலில் 4‌7 பெண்களை பாஜக களமிறக்கியது. இதில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 54 பெண் வேட்பாளர்களில்‌ சோனியா காந்தி‌, ஜோதிமணி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் 24 பெண்களை நிறுத்திய பகுஜன் சமாஜ்‌ கட்சியில் ஒரே ஒரு வேட்பாளரும், சுயேச்சையாக போட்டியிட்ட 222‌ பெண் வேட்பாளர்களில் ‌ஒரே ஒருவருர் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளார்.

தற்போது எம்.பி.யாக உள்ள 41 பெண்களில், 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சோனியா, ஹேமா மாலினி உள்ளிட்டோரும் அடங்குவர். தமிழகத்தில் திமு‌க சார்பில் போட்டியிட்ட‌ கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com