குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிக்குச் சென்ற ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் கொள்ளை

குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிக்குச் சென்ற ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் கொள்ளை
குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிக்குச் சென்ற ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் கொள்ளை

புழல் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 75 சவரன் நகை ரூ.2 லட்சம் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி 6வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (70) டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர், தமது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினால் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 75 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறிதத அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார், விசாரணை நட்த்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com