தமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழகத்தில் வேலைநிறுத்தம் நடந்து வந்தாலும் 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பத்து தொழிற்சங்கள் மேற்கொண்டுள்‌ள வேலைநிறுத்தம் தோல்வியில் முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், பின்‌னர் செய்தியாள‌ர்களை சந்தித்தார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படவில்லை என்று கூறிய அமைச்சர், போராட்டத்தைக் கைவிட்டு போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பணிக்கு திரும்பவில்லை எனில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம் வைத்திருப்பவர்களைக் கொண்டு தினக்கூலி அடிப்படையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். போராட்டம் தொடரும் பட்சத்தில், வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரம் பேருந்துகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இயக்கப்படும் என்று அவர் கூறினார். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை அரசியலாக்க முயற்சி நடப்பதாகவும், நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கட்டணம் அதிகம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com