தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 75% பேருந்து கட்டண சலுகை!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 75% பேருந்து கட்டண சலுகை!
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 75% பேருந்து கட்டண சலுகை!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏறும் இடத்திலிருந்து 100கிமீ வரை கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான துணையாளர் ஒருவருடன் மாநகர White board பேருந்துகளில் மட்டும் முற்றிலும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க முடியும். இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பேருந்து ஏறும் இடத்தில் இருந்து 100 கிமீட்டர் தூரத்திற்கு கட்டணமின்றி பயணிக்கலாம் என்று கூறியுள்ளது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

மேலும், தமிழகம் முழுவதும் பயணிக்க வேண்டுமானால் அரசுப் பேருந்துகளில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 75% கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25% கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதைத் தவிர பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கியுள்ள இடத்திலிருந்து பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவை சென்று வர ஒருநாளைக்கு 100 கிமீ வரை இலவச பயண சலுகை உள்ளது.

மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கண்டறியப்பட்டு, ஆரம்ப நிலை பயிற்சிகளுக்கு செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும் சேர்த்து இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை சார்பில் ஒரே ஒரு பேருந்து மட்டும் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சோதனை முறையில் பேருந்து பயன்பாட்டில் உள்ளதாகவும், கூடுதலாக 500 பேருந்துகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது டெண்டர் முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் சலுகைகளுடன் ஒவ்வொரு மாதமும் சுமார் 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி பயனடைவதாக போக்குவரத்துத்துறை கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com