சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ?

சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ?
சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ?

தமிழகத்தில் 738 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஸ் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, நாள்தோறும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மாவட்ட ரீதியான கணக்கின்படி, கோவை - 60, திண்டுக்கல் - 46, நெல்லை - 40, ஈரோடு - 32, திருச்சி - 36, நாமக்கல் - 33, ராணிப்பேட்டை - 27, செங்கல்பட்டு, மதுரை (தலா) - 24, கரூர் - 23, தேனி - 39, தூத்துக்குடி - 17, விழுப்புரம் - 20.

திருப்பூர் - 22, கடலூர், சேலம், திருவள்ளூர் (தலா) - 13, திருவாரூர் - 12, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருப்பத்தூர் (தலா) - 11, திருவாண்ணாமலை - 9, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேலூர் (தலா) - 6, சிவகங்கை - 5, நீலகிரி - 4, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் (தலா) - 2, அரியலூர், பெரம்பலூர் (தலா) -1.

தமிழகத்தில் இதுவரை 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4893 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லையென சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் 344 பரிசோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com