“என்னைப்பார்த்தாவது ஹெல்மெட் அணியுங்கள்” - ரிக்‌ஷாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 73 வயது முதியவர்

“என்னைப்பார்த்தாவது ஹெல்மெட் அணியுங்கள்” - ரிக்‌ஷாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 73 வயது முதியவர்
“என்னைப்பார்த்தாவது ஹெல்மெட் அணியுங்கள்” - ரிக்‌ஷாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 73 வயது முதியவர்

நீதிமன்றம் அறிவுறுத்தியும் பல பேர் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கும் நிலையில், சைக்கிள் ரிக்‌ஷாவில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்கிறார் முதியவர் ஒருவர்.

திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(73). இவர் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே நடைப்பாதையில் வாட்ச் ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வருகிறார். தினந்தோறும் காஞ்சிவாயல் முதல் பொன்னேரி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே கடக்கிறார். 

சென்னை உள்ளிட்ட எந்த பகுதிக்கு சென்றாலும், இந்த சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவதற்கே ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் செல்வார் வெள்ளைச்சாமி. 

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்களும் சாலையில் தான் பயணம் செய்கிறோம். அனைத்து உயிர்களும் ஒன்று தான். நீதிமன்றம் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், சிலர் அதனை பின்பற்றாமல் இருக்கின்றனர். சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்லும் என்னை ஹெல்மெட் அணிய யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 

இது போன்று வித்தியாசமாக விழிப்புணர்வு செய்யும் என்னை பார்த்தாவது மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து சென்றால் விபத்து தவிர்க்கப்படுவதுடன், உயிர் சேதமும் தவிக்கப்படும்” என்கிறார்.  

மேலும், போரில்லா உலக அமைதியை வலியுறுத்தும் வகையில், சைக்கிள் ரிக்‌ஷாவில் சைனா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இவர், சைக்கிள் ரிக்‌ஷாவை ஹெல்மெட் அணிந்து ஓட்டி செல்கிறார். தலைகவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சைக்கிள் ரிக்‌ஷாவில் ஹெல்மெட் அணிந்து செல்லும் இந்த முதியவரின் முயற்சி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்றே சொல்லலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com