சிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்

சிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்

சிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்

மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர உரையில் தெரிவித்தார். 

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். இது 2வது
முறையாக அவர் சுதந்திரத்தில் ஏற்றும் கொடியாகும். இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து உரையாற்றிய
முதலமைச்சர், “மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்களின் காக்கை அரசு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு விவசாயிகளின் நலம் காக்கும் அரசு. தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு
நடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் அரசு சாதனை படைத்துள்ளது” என்றார்.

உரையாற்றி பின்னர் தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த
பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தேனி பழனிசெட்டிபட்டி 2வது பரிசையும், தருமபுரி பாலக்கோடு
நகராட்சி 3வது பரிசையும் பெறுகின்றன. உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக  திருப்பூர் மாநகராட்சி தேர்வு
செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளில் சிறந்ததாக கோவில்பட்டி, கம்பம், சீர்காழி முறையே முதல் 3 இடங்களை பிடித்தன. தமிழக அரசின்
கல்பனா சாவ்லா விருது கோவையை சேர்ந்த முத்துமாரி என்பவருக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com