72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

72வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார்.

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும்
முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுகின்றனர். அதன்படி சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொடியேற்றினார். பின்னர் முப்படை வீரர்கள் முன்னிலையில், தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.

சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மாநில தலைநகரங்கள் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேபோன்று சென்னையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமான
நிலையங்கள், ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள்
அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர
காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com