தமிழ்நாடு
மசாஜ் சாதனத்தில் கொண்டுவரப்பட்ட 700 கிராம் தங்கம் பறிமுதல்!
மசாஜ் சாதனத்தில் கொண்டுவரப்பட்ட 700 கிராம் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.21.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை, சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். தஞ்சாவூரை சேர்ந்த இளையராஜா என்பவரது உடமைகளை சோதனை செய்த போது, அவர் பாடி மசாஜரில் மறைத்து எடுத்து வந்த 350 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அதே விமானத்தில் வந்த தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த மிஸ்பாதின் என்பவர் உடைமையில் மறைத்து எடுத்து வந்த 350 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் மதிப்பு ரூ 21.20 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.