700 காளைகள்..300 மாடுபிடி வீரர்கள் - அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு

700 காளைகள்..300 மாடுபிடி வீரர்கள் - அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு
700 காளைகள்..300 மாடுபிடி வீரர்கள் - அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. சிறப்பாக களமாடும் காளைக்கு, கன்றுக்குட்டியுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்பட உள்ளது. 

மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்படும். 

கொரோனோ தடுப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி. வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பார்வையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனோ இல்லை என்ற நெகட்டிவ் சான்று கட்டாயம் தேவை. இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு கன்றுக்குட்டியுடன் பசுவும் பரிசாக அளிக்கப்பட உள்ளது. அதோடு தங்கக்காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் போட்டியில் வெல்லும் காளை மற்றும் காளையர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. 

பாதுகாப்புப் பணியில் மதுரை எஸ்.பி. தலைமையில் 2,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாலமேடு செல்லும் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 50 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 5 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com