\
70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி

70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி

70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி
Published on

நாகை அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் சூளிகாம்பாள் என்ற 70 வயதுடைய பெண் யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் சூலிகாம்பாள் என்ற 70-வயதுடைய பெண் யானை இருந்தது. இந்த யானை வயது முதிர்வின் காரணமாக இன்று காலை 11-மணியளவில் கோயில் வளாகத்தில் உயிரிழந்தது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உயிரிழந்த யானையின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவிலின் அருகே உள்ள முருகநாயனார் தோட்டத்தில் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com