மதுரை வில்லாபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதித்த 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - ராஜ மீனா தம்பதி. இவர்களுக்கு ஏழு வயதில் தியாஷினி என்ற மகள் இருந்தார்.
கடந்த 3 தினங்களாக தியாஷினி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிறுமி தியாஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வில்லாபுரம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.