மணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
மணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழந்தார்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகேயுள்ளது கீழக்குறிச்சி கிராமம். அக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. அக்கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஐயனார் கோயில் திடலில் 2006-ம் ஆண்டு 500 மீட்டர் பரப்பளவில் மணல் குவாரி அமைத்து மண் விற்பனை செய்துள்ளார் ஒருவர்.

அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மணல் எடுத்ததன் காரணமாக அந்த பகுதி ஆழமான மணற்கேணிபோல் மாறியது. இதனை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அப்பகுதியில் தண்ணீர் நிரப்பி மீன்வளர்ப்பும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நீர்ப்பரப்பில் சிறிய மிதவை ஒன்றும் இருந்துள்ளது.

இதற்கிடையே கனமழை பெய்த காரணத்தால் பள்ளம் முழுவதும் நீர் தேங்கி பெரிய கிணறு போல இருந்துள்ளது. இந்நிலையில் கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மிதவையில் ஏறி விளையாடியுள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்தார். அருகில் இருந்த சிறுமிகள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனை அடுத்து சிறுமிகள், அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக வந்த கிராமத்தினர் சிறுமியை தேடியுள்ளனர். ஆனால் பத்து அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிய நிலையில் சிறுமியை சடலமாகவே மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com