தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடும் வரை தனது போராட்டம் தொடரும் என மது ஒழிப்பிற்காக தன் சின்னக் குரலில் சீற்றம் காட்டுகிறான் 7 வயது சிறுவன் ஆகாஷ்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆகாஷ், காஞ்சி மாவட்டத்தில் உள்ள படூரில் கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதிகமான கல்லூரி மாணவர்கள் மது அருந்துவதாக தெரிவித்துள்ளான். இதன் காரணமாக சிலர் பெண்களிடம் தகராறு செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான். படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரிய ஆகாஷ், அதுவரை தனது போராட்டம் தொடரும் என்று கூறியிருக்கிறான்.