\
காஞ்சிபுரம்: விதி மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்

காஞ்சிபுரம்: விதி மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்

காஞ்சிபுரம்: விதி மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்
Published on

காஞ்சிபுரத்தில் விதி மீறி செயல்பட்டதாக 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பெரும்பாலான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் இயங்கிவந்த சைக்கிள் கடை, குழந்தைகளுக்கு பொம்மை விற்கும் கடை, முடிதிருத்தும் கடைகள் என 7 கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இன்று இயங்கியுள்ளன.

மேலும் அக்கடைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் தெரிகிறது. இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நகராட்சிக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து உத்தரவை மீறி செயல்பட்ட செய்த 7 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com