\
சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
Published on

சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் சசிகலாவுக்கு கார் வழங்கிய நிலையில், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு வாகனம் தந்தவர், வரவேற்பு அளித்தவர் என 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, நாகராஜ், பிரசாந்த் குமார், ஆனந்த் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தியும் நீக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com