ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் புதிய தலைமுறை

மண்ணில் புதைந்த வீடு: குழந்தைகள் உட்பட 7 பேரின் கதி என்ன?

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் தணியவில்லை. திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை அண்ணாமலையார் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டது.
Published on

திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் தணியவில்லை. திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை அண்ணாமலையார் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டது.

ஃபெஞ்சல் புயல்
Cyclone Fengal | புரட்டிப்போட்ட ஃபெஞ்சல்... மிதக்கும் வீடுகள்.. கவலையில் மக்கள்!

ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததுடன், ராஜ்குமார் என்பவரின் வீடு மண்ணில் புதைந்தது. இதில் அவரது வீட்டில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது நிலை என்னவென்றே
தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, திண்டிவனத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மிஸ்சி, ரூபி என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com