\
7 MSW Students Complete One-Month Fieldwork in Ezhil Nagar
எழில் நகர் Pt web

எழில் நகர் | பள்ளி இடைநின்ற மாணவர்கள்.. MSW மாணவர்களின் களப்பணி!!

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியைச் சேர்ந்த 7 சமூகப்பணி மாணவர்கள், துரைப்பாக்கம் எழில் நகரில் ஒரு மாத கால களப்பணியை நிறைவு செய்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்தான அறிக்கையை IRCDUC அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.
Published on: 

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பின்தங்கிய நகர்ப்புற சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையம் (IRCDU ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் மூலம், வறுமை, போதைப்பொருள் பயன்பாடு, குடும்பச்சூழ்நிலைகள் போன்ற காரணங்களால் சுமார் 100 மாணவர்கள் பள்ளியை விட்டு இடைநின்றது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டது சென்னை மாநகராட்சி.

சமூகப்பணி மாணவர்கள்
சமூகப்பணி மாணவர்கள்Pt web

இதற்கிடையில் தான், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியைச் சேர்ந்த MSW (முதுநிலை சமூகப்பணி) மாணவர்கள் 7 பேர், துரைப்பாக்கம் எழில் நகரில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து களப்பணியில் ஈடுபட்டனர். இந்த ஒரு மாத கால கள ஆய்வின் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 23 அன்று எழில் நகரில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், IRCDUC உடன் இணைந்து எழில் நகரில் கல்வி இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிதல், குழந்தைகள் பள்ளியை விட்டு விலகுவதற்கான பின்னணிக் காரணங்களைக் குடும்பங்களுடன் உரையாடி அறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்பு இயக்கம் மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட 10 கோடி பேர் போதைப் பொருள் இல்லா உறுதிமொழி பெருந்திரள் இயக்கத்தை மாணவர்கள் தங்கள் கள ஆய்வின் மூலம் ஒரு சமூகத்தின் வீடுவரை கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் தான், ஒரு மாத கால திட்டக் களப்பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, தொடர் நடவடிக்கைகளுக்காக நகர்ப்புற வறிய சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையத்திடம் (IRCDUC) தங்கள் அறிக்கையை ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com