\
3 மாதத்தில் ஸ்மார்ட் கார்டு கோரி 7 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழக அரசு

3 மாதத்தில் ஸ்மார்ட் கார்டு கோரி 7 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழக அரசு

3 மாதத்தில் ஸ்மார்ட் கார்டு கோரி 7 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழக அரசு
Published on: 

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல்துறை அறிவித்துள்ளது.

மே மாதத்தில் மட்டும் 1,26,414 பேரும், ஜூன் மாதத்தில் 1,57,497 பேரும், ஜூலையில் 2,61,529 பேரும் என மொத்தம் 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவற்றில், 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49,920 பேர் விண்ணப்பித்ததில், 17,728பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில், கோயம்புத்தூர் sமாவட்டத்தில் 43,647 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 38,295 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com