மதுரையில் ஊரடங்கை மீறி கும்பலாக சூதாட்டம்: கைது செய்த போலீசார்

மதுரையில் ஊரடங்கை மீறி கும்பலாக சூதாட்டம்: கைது செய்த போலீசார்

மதுரையில் ஊரடங்கை மீறி கும்பலாக சூதாட்டம்: கைது செய்த போலீசார்
Published on

ஊரடங்கை மீறி மதுரையில் கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடியவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல், கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடியவர்களை மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. அக்கோயில் வளாகத்தில் 7 பேர் கும்பலாக அமர்ந்து பணம் வைத்து சூதாட்ட முறையில் சீட்டு விளையாடி உள்ளனர். இந்தத் தகவலை அறிந்த நாகமலைப்புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1000 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com