எண்ணூரில் கடல் அலையில் சிக்கிய 7 சிறுவர்கள்: 4 பேர் பத்திரமாக மீட்பு, 2 பேர் உயிரிழப்பு

எண்ணூரில் கடல் அலையில் சிக்கிய 7 சிறுவர்கள்: 4 பேர் பத்திரமாக மீட்பு, 2 பேர் உயிரிழப்பு
எண்ணூரில் கடல் அலையில் சிக்கிய 7 சிறுவர்கள்: 4 பேர் பத்திரமாக மீட்பு, 2 பேர் உயிரிழப்பு

சென்னை எண்ணூரில் கடலில் குளித்த 7 சிறுவர்கள் அலையில் சிக்கி 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (50). இவரது 2 குழந்தைகள் உட்பட 7 சிறுவர்களுடன் நெட்டுக்குப்பம் கடலில் குளித்துள்ளனர். அப்போது கடல் அலை அதிகமாக இருந்ததால் யாரும் எதிர்பாராத வகையில் கடலில் விளையாடிய சிறுவர்கள் கடல் அலையில் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட டேவிட், கடலில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதில், 4 சிறுவர்களை மீட்ட நிலையில், மற்ற 3 சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். இதையடுத்து உடனடியாக நெட்டுக்குப்பம் மீனவர்கள் மற்றும் எண்ணூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டேவிட்டின் 12 வயது மகன் அலெக்ஸ் மற்றும் அவரது உறவினரின் 16 வயது மகள் ருத்ரா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய விக்கி (10) என்ற சிறுவனை தீயணைப்பு துறையினரும், நெட்டுக்குப்பம் மீனவர்களும் தேடி வருகின்றனர்.

இதில், டேவிட்டின் மகள் ரூப சந்தா (16), இஸ்ரவேல் (15), ஜோஸ் (14), பெஞ்சமின் (12) ஆகிய 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தையின் கண் முன்னே மகன் அலெக்ஸ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து சடலங்களாக மீட்கப்பட்ட 2 சிறுவர்களின் உடல்களை கைப்பற்றிய எண்ணூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட விக்கி (10) என்ற சிறுவனை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com