அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

தேனி மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால், அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி, அதிமுகவை சேர்ந்த 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி, 6 கவுன்சிலர்கள் உட்பட 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com