கீழடியில் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி - உலை கலனிலிருந்து 6 மண் தொட்டிகள் கண்டெடுப்பு

கீழடியில் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி - உலை கலனிலிருந்து 6 மண் தொட்டிகள் கண்டெடுப்பு
கீழடியில் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி -  உலை கலனிலிருந்து 6 மண் தொட்டிகள் கண்டெடுப்பு

கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உலை கலனிலிருந்து 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. 5 கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையிலும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 10 முதுமக்கள் தாழி, மனித எலும்புகள், விலங்கு எலும்பு கூடு, பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி, கொள்கலன்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொன்மையான மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக கருதப்படும் மணலுரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மண் பாண்டங்களை சூடு செய்ய பயன்படும் ஒன்றரை மீட்டர் சுற்றளவிலான உலை கலனிலிருந்து பூந்தொட்டி போன்ற வடிவம் கொண்ட 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த மண் பாண்டங்கள் தொழில் கூடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com