
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. குணமடந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,303 லிருந்து 3,435 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 18-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு கேஎம்சியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் ஏற்கெனவே சிறுநீரக கோளாறுக்கும் பல மாதாங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.