ஆபாச படத்தை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - அரசியல் பிரமுகர் கைது

ஆபாச படத்தை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - அரசியல் பிரமுகர் கைது

ஆபாச படத்தை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - அரசியல் பிரமுகர் கைது
Published on

சென்னையில் 13 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

 சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்த முதியவர் பாளையம் என்கின்ற ரவி (68). அரசியல் பிரமுகரான இவர், 13 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் 1098 ஹெல்ப் லைன்னை தொடர்புகொண்டு புகார் அளித்தனர். உடனே ஹெல்ப்லைன் எண்ணில் இருந்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல்துறையினர் ரவியை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரை விடுவிக்கக்கோரி, உறவினர்கள் கல்லறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com