தமிழ்நாடு
ஒரு நாளைக்கு 68,000 கொரோனா பரிசோதனைகள் - நாமக்கல்லில் முதல்வர் பேச்சு
ஒரு நாளைக்கு 68,000 கொரோனா பரிசோதனைகள் - நாமக்கல்லில் முதல்வர் பேச்சு
நாமக்கல் மாவட்டத்தில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது “நாமக்கல் மாவட்டம் சிறப்பாக செயல் பட்ட காரணத்தாலும், அதிகளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதன் காரணமாகவும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மனநிறைவு அளிக்கும்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தினசரி தமிழகத்தில் 68,000 பரி சோதனைகள் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றினால் தான் கொரோனாத் தொற்றை தடுக்க முடியும்” என்றார்.