Gold seized
Gold seizedpt desk

மதுரை: பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 67 கிலோ தங்க நகைகள், உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் உரியவர்களிடம் நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை விமான நிலையம் அருகே இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

Gold seized
Gold seizedpt desk

அந்த வாகனத்தில் 67 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளுடன் இருந்த அந்த வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

Gold seized
‘தம்பி துபாயா...’ ஓபிஎஸ் பரப்புரையில் டிப்-டாப் ஆக வந்து முழக்கமிட்ட இளைஞரால் பரபரப்பு!

முதற்கட்ட விசாரணையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அந்த 67 கிலோ தங்கம், மதுரை மற்றும் சுற்றியுள்ள பிரபல நகைகடைகளுக்கு கொடுக்கப்படுவதற்காக எடுத்து வரப்பட்டது என தெரியவந்தது. இந்நிலையில், நகைகளை கொண்டுவந்த நிறுவனத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்த பின்னர், நகைகள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் சில மணி நேரத்துக்கு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com