தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் - மின்வாரியம்

தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் - மின்வாரியம்
தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் - மின்வாரியம்

தமிழ்நாடு முழுவதும் 5 மாதங்களில் மின் கம்பி அறுந்து விழுந்து 63 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக புதிதாக நியமிக்கப்பட்ட கேங்மேன் பணியாளர்கள், களப் பணியாளர்கள் மின் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளதாகவும், மின் கம்பிகள் அறுந்து விழுவதால் ஏற்படும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஒவ்வொரு மின் விபத்தையும் தெளிவாக ஆராய வேண்டும் என்றும், மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மின்வாரியம் குறிப்பிட்டுள்ளது.

மின் விபத்துகளை ஆய்வு செய்து, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை பொறியாளருக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com