\
சிறுமிக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்கொடுமை? - முதியவர் கைது

சிறுமிக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்கொடுமை? - முதியவர் கைது

சிறுமிக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்கொடுமை? - முதியவர் கைது
Published on

மதுரையில், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரையை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தாய், தந்தை இல்லாமல் தாத்தா - பாட்டியிடம் வசித்து வந்தார். 5ஆம் வகுப்பு படிக்கும் இச்சிறுமி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு மற்றும் பள்ளிக்கு சென்று வரக்கூடிய வேலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடிக்கடி சிறு, சிறு உணவு பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அந்தச் சிறுமியை அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் ஹாஸ்டலில் சேர்ப்பதற்காக சென்ற போது, அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அப்போது மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக கூறியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து அந்த 10 வயது சிறுமியை உறவினர்கள் மற்றும் பலர் விசாரணை செய்த போது, அருகாமையில் உள்ள ஒரு முதியவர் தான் என்னை பாலியல் சீண்டல் செய்ததாக அவர் குற்றச்சாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அந்த முதியவரை கண்டுபிடித்து தாக்கியுள்ளனர். அதன்பின் இரத்தம் சொட்டச் சொட்ட காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர். 

மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com