\
கடலுக்குள் சிக்கித் தவிக்கும் 60 மீனவர்கள்! மீட்க உறவினர்கள் கோரிக்கை..!

கடலுக்குள் சிக்கித் தவிக்கும் 60 மீனவர்கள்! மீட்க உறவினர்கள் கோரிக்கை..!

கடலுக்குள் சிக்கித் தவிக்கும் 60 மீனவர்கள்! மீட்க உறவினர்கள் கோரிக்கை..!
Published on

(கோப்புப் படம்)

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் 3 படகுகள் கரை சேர்ந்துள்ளன.

அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கு முன்னதாக குமரி கடற்கரை பகுதிகளில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு 90 மீனவர்கள் 8 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் குறித்த தகவலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு தெரிவிக்க முடியாத சூழல் நிலவுவதால், அவர்களை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மீனவர்கள் மனு அளித்தனர். 

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் 3 படகுகள் கோவா, கொச்சியில் கரை சேர்ந்துள்ளன. இதில் பயணம் செய்த 30 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். இன்னும் 5 படகுகளும் 60 மீனவர்களும் கரை திரும்ப வேண்டியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com