`முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' - இன்று கையெழுத்தாகிறது 60 ஒப்பந்தங்கள்!

`முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' - இன்று கையெழுத்தாகிறது 60 ஒப்பந்தங்கள்!
`முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' - இன்று கையெழுத்தாகிறது 60 ஒப்பந்தங்கள்!

சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

`முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில், இதுவரை 94 ஆயிரத்து 925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகம் வந்துள்ளதாகவும், இதன் மூலம் 2 லட்சத்து 26ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலீட்டு மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில், 21 புதிய தொழில்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர, 12 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com