\
டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு
Published on

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

செல்லனூர் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகள் விஷ்மிதாவுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷ்மிதாவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் தீவிரமடைந்ததால் அவரது பெற்றோர் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஷ்மிதா ந‌ள்ளிரவு உயிரிழந்தார்.

நேற்றைய தினம் மட்டும், டெங்கு மற்றும் காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்தபோதும், நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதில் குறிப்பாக, சிறுவர்களும், முதியவர்களுமே அதிகமாக பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com