சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்மைக்காலமாக வழப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரிதது வருகின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் 14 வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதையடுத்து, நேற்றிரவு காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனயில் ஈடுபட்டனர். அப்போது, சாத்தங்காடு பகுதியில் 3 வழிப்பறி கொள்ளையர்களையும் வேப்பேரி பகுதியில் 3 வழிப்பறி கொள்ளையர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் 30 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், பைக் ரேசில் ஈடுபட்டதாக அபிராமிபுரத்தில் 16 இருசக்கர வாகனங்களும், மயிலாப்பூரில் 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அடையாறு, மெரினா, ஆர்.கே.நகர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளிலும் அதிவேகமாகச் சென்றதாக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தம் 42 பைக்குகளை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், அதிவேகமாக சென்றது தொடர்பாக இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.