தமிழ்நாடு
கடன் பிரச்னையால் தற்கொலை - 6 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கடன் பிரச்னையால் தற்கொலை - 6 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மதுரையில் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட 6 பேரின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை வண்டியூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கடன் பிரச்னை காரணமாக வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் சிகிச்சைகாக அரசு இராஜாஜி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் பிரவீன் என்பவர் மட்டும் விருதுநகர் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருவதால் உயிர் பிழைத்துள்ளார்.