6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது
சென்னையில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் கடந்த ஜுன் 30ஆம் தேதி காணாமல் போனார். அவரது பெற்றோர் அளித்த புகாரில் திருப்பூரில் பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். இந்நிலையில், பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி, பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலியான நிறுவனம் நடத்தி வந்ததும், அங்கு பணிபுரிந்த பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. மேலும் தான் காவல்துறை அதிகாரி எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும், 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. ராஜேஷ் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரியின் சீருடை, போலியான ஆதார் அட்டை, கைவிலங்கு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.