சென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை

சென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை

சென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை
Published on

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஆறு இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் அதிகரித்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடும் என்பதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

புதிய விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய விமான நிலையங்கள் அமைக்க, சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் விமான நிலையங்களுக்கான ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்த பின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் இறுதி செய்யப்படும். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com