"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 6 வழிச்சாலை அமைக்கப்படும்"-அமைச்சர் மெய்யநாதன்

"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 6 வழிச்சாலை அமைக்கப்படும்"-அமைச்சர் மெய்யநாதன்

"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 6 வழிச்சாலை அமைக்கப்படும்"-அமைச்சர் மெய்யநாதன்

கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆறு வழிச்சாலை அமைக்கப்படும் என மதுரை விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ’’தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வு உயரக் கூடிய நிலையிலும், ஒட்டுமொத்த மக்களையும் வளர்ச்சிக்காக கொண்டுசெல்லும் நிதிநிலை அறிக்கையை தற்போது முதலமைச்சர் தந்துள்ளார். அதேபோல் விளையாட்டு துறைக்கு தேவையான நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதில் ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் முக்கியமான பைலட் திட்டமாகும்.

ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டமானது, 2024ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் தமிழகத்தில் இருந்து வீரர்களை பங்கேற்க வைப்பதற்கும், அவர்களை தயார்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒலிம்பிக் தமிழக வீரர் வீராங்கனைகளை தயார்படுத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செஸ் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதியை முதலமைச்சர் பெற்று தந்துள்ளார். குறிப்பாக, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்போடு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்’’ என்றார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு...

’’தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் முழு கவனம் செலுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் துறை என்ற பெயரை மாற்றி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் என்ற பெயர் மாற்றம் செய்துகொண்டு இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மண்ணை மலடாக்கிய எந்த ஒரு திட்டத்தையும் தற்போது அமல்படுத்தாமல் தமிழகத்தை பாதுகாக்கும் ஒரு முதல்வர், கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும்போது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்தான் திட்டத்தை செயல்படுத்துவார்’’ என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com