பேரவையில் 6 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்

பேரவையில் 6 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்

பேரவையில் 6 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்
Published on

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று 6 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்ப‌ட்டன. மேலும். விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் வர்தா புயலுக்கு மத்தியரசு வழங்கிய நிவாரணம் வழங்கிய விவகாரங்களில் சட்டப்பேரவையில் இன்று ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

‌சட்டப்பேரவையில், ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ சக்கரபாணி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நல்லதாங்கல் ஆற்றில் அணை கட்டும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் அணை கட்டி முடிக்கப்படும் என்றார்.

பின்னர் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது 80 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக அரசு 7 கோடி ரூபாயும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கான கடன், 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகனும் குறுக்கிட்டு பேசினார். இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அமைதி வளம், வளர்ச்சி, வளம் என்ற மூன்று நோக்கங்களை அறிவித்த அ.தி.மு.க. அரசு, மூன்றையுமே நிறைவேற்ற தவறி விட்டது என்று குற்றம்சாட்டினார். அத்துடன் வறட்சி மற்றும் வர்தா புயல் சேதத்திற்கு மத்தியரசு நிதி ஒதுக்கிய விவகாரங்களில் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை வரும் 28ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

2016-17 ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3 சதவீத்தை விட அதிகரித்தது, இதற்காக தமிழக நிதி நிலைமை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதற்கான சட்டத்திருத்தம், டாஸ்மாக் மதுபானங்களை ‌5% வரி உயர்த்துயதற்கான சட்டத்திருத்தம் உள்ளிட்ட 6 சட்டத்திருத்த மசோதக்களும் நிறைவேறின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com