தமிழ்நாடு
நொடியில் பிரிந்த 6 உயிர்கள்... எமனாக முன்னே நின்ற லாரியால் ஏற்பட்ட சோகம்!
சேலம் விபத்து தொடர்பாக லாரியை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேன் மோதி சிதறிய விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக லாரியை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்