சங்ககிரி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சேலம் சங்ககிரி விபத்துக்காட்சி
சேலம் சங்ககிரி விபத்துக்காட்சி

கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறை சென்றபோது நேர்ந்த இந்த விபத்தில் செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி ஆகியோருடன் ஒரு வயது குழந்தை சஞ்சனா உயிரிழந்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com