சென்னையைச் சேர்ந்த நபர் மரணம்.. இம்மாதம் மட்டும் 6 பேர் உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்

கோவை வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்யச் சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்பவர் கடந்த 29ஆம் தேதி தனது நண்பர்களுடன் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். 30 ஆம் தேதி காலையில் ரகுராம் மலையேற தொடங்கிய நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பாரம்தூக்கும் டோலி தொழிலாளர்கள் உதவியுடன் அவர் மலையடி வாரத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளார். மலையடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே ரகுராம் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ரகுராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாதம் மட்டும் வெள்ளியங்கிரி மலையேற சென்றவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கிரி வரும் பக்தர்களின் வசதிக்காக வெள்ளியங்கிரி மலையில் 4 இடங்களில் மருத்துவ முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், மலையடிவாரத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com