\
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர்: முதல்வர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர்: முதல்வர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர்: முதல்வர் அறிவிப்பு
Published on: 

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அரசி அட்டைதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய முதல்வர் “நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும். செய்யாறு அருகே வட இலுப்பையில் பாலாற்றில் 27 கோடி ரூபாயில் தடுப்பனை கட்டியது அதிமுக அரசு” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com