தமிழகத்தில் இத்தனை கோடி வாக்காளர்களா? - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - முழுவிபரம்

தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி
தலைமை தேர்தல் அதிகாரிpt web

வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3 கோடி ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும், 3ஆம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 16 பேரும் உள்ளனர்.

17 வயதினரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியதும் அவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதற்கு VOTER HELPLINE MOBILE APP மூலமாக தங்களது பெயரை சேர்க்கலாம். இளைஞர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com