இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை! தீர்ப்பின் முழுவிவரம்

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை! தீர்ப்பின் முழுவிவரம்
இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை! தீர்ப்பின் முழுவிவரம்
Published on

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த நேரத்தில் சற்று திரும்பி பார்க்கலாம்.

பேரறிவாளன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுவிக்க கோரி பேரரிவாளன் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு கடந்த மே 18ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

*பிரிவு 161கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்த அவரை கட்டுப்படுத்துவதுடன் அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டவர் என்பது உறுதியாகிறது.

* பிரிவு 161 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தாமை அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணம் சொல்லப்படாத தாமதத்தை செய்யும் பொழுது அது நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உட்பட்டது. குறிப்பாக ஒரு கைதியை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரைகளின் மீது ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தால் அது நீதித்துறையின் ஆய்வுக்குள் முழுமையாக வந்துவிடும்.

* பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் கால தாமதம் செய்து எந்த அரசியலமைப்பு ஆதாரமும் இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

* ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்.

* 160 ஆவது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் மீது இரண்டரை ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது

* பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம் சிறையில் அவரது நன்னடத்தை பரோலின் பொழுது அவரது நன்னடத்தை அவரது மருத்துவ பதிவிகளில் இருந்து அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய் அவர் பெற்ற கல்வித் தகுதிகள் மற்றும் அவரது மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக் கூடிய விஷயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவரை உச்ச நீதிமன்றம் விடுவிக்கிறது.

* அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் இதுவரை பெற்ற தண்டனை முழுமையாக அனுபவித்ததாக கருதிக் அவரை விடுதலை செய்து தீர்ப்பு.

* தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலை சம்பந்தமாக எடுத்த முடிவு பல்வேறு சட்ட விதிகளுக்கு உட்பட்டது அதன்மீது
ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

* முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

இவ்வாறு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் தான் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com