\
கடனை 3மாதத்தில் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு

கடனை 3மாதத்தில் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு

கடனை 3மாதத்தில் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Published on

கோச்சடையான் படத்துக்காக பெற்ற கடன் ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோச்சடையான் படத்துக்காக பெற்ற 10 கோடி ரூபாய் கடனில் எட்டரை கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என்றும் அதை செலுத்த
உத்தரவிடக் கோரியும் லதா ரஜினிகாந்த் மீது ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு
வந்தபோது, கடனை எப்போது திருப்பிச் செலுத்துவீர்கள் என்று லதா ரஜினிகாந்த் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர்
இதுதொடர்பாக 12.30 மணிக்குள் பதில் அளிக்கவும் கெடு விதித்தது. இதனையடுத்து ரூ.6.2 கோடி நிலுவைத் தொகையை 3
மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com