\
தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமி

தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமி

தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமி
Published on

விருதுநகரில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார். 

விருதுநகர் வீரபத்திரன் நகரை சேர்ந்த செல்வராஜ்-சுபலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகள் அருணாதேவி. இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் வசிக்கும் ரவி என்பவர் புதிதாக கட்டிவரும் கட்டிடப் பணிக்காக அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி அருணாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

விளையாடிகொண்டிருந்த சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அருகில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் சென்று பெற்றோர் பார்த்தபோது அங்கு சிறுமி மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தவித தடுப்பும் இல்லாமல் திறந்த நிலையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டதே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com