7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள்!

7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள்!

7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள்!
Published on

சென்னையில் 7 வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்களை வெற்றிகரமாக மருத்துவர்கள் நீக்கி சாதனை ப‌‌டைத்துள்ளனர். 

சென்னையை சேர்ந்த பிரபுதாஸ் என்ப‌வரின் மகனுக்கு 3வயது முதல் வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது. 7 வயதாகிய போது அந்தச் சிறுவனுக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஸ்கேன் எடுத்து பார்த்ததில், சிறுவனின் வாயில் வீங்கிய ‌பகுதியில் நூற்றுக்கணக்கா‌ன பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து சிறுவனுக்கு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுவனின் வாயில் இருந்து சிறிதும், பெரிதுமாக 526 பற்கள் அகற்றப்‌பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com