\
கடலூர்: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்

கடலூர்: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்

கடலூர்: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்
Published on: 

கடலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிக்கபட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன்படி கடலூரில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் 27 பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கடலூர் அருகே புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு காரில் 51 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராம் பிரசாத் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அவர் தனியார் தொழிற்சாலை நடத்துவதாகவும் அதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் உரிய ஆவணம் இல்லதாதால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com