திருப்பூர்: இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்த பண்ணை.. தீயில் கருகிய 5000 கோழிக்குஞ்சுகள்!

திருப்பூர்: இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்த பண்ணை.. தீயில் கருகிய 5000 கோழிக்குஞ்சுகள்!
திருப்பூர்: இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்த பண்ணை.. தீயில் கருகிய 5000 கோழிக்குஞ்சுகள்!

தாராபுரம் உப்பாறு அணை அடுத்த பெரிய குமாரபாளையம் பகுதியில் விவசாயியின் கோழிப்பண்ணையில் இடி தாக்கி 5000 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாம்பக்காடு தோட்டத்தில் ராமசாமி என்பவர் தனது கோழிப்பண்ணையில் 10 ஆயிரம் கறிக் கோழிகளை ஒப்பந்த அடிப்படையில் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. அப்போது, ராமசாமி கோழிப்பண்ணை அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது இடி விழுந்து கறிக்கோழி பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் பண்ணையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் கோழிகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன, மேலும், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள பண்ணையும், பண்ணையில் இருந்த கோழிப்பண்ணை தளவாட பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்தன. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com