உசிலம்பட்டி | சாலையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டிப்போட்டு அள்ளிச்சென்ற மக்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலையில் சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டிமுகநூல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலையில் சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

தேனி நெடுஞ்சாலையில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதி மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளிச்செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாலையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் வரை சிதறிக்கிடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com